UAE Tamil Web

துபாய் DUTY FREE மில்லினியம் டிராவில் இரண்டாவது முறை வென்ற இந்தியர்.. BMW காரை-ஐ தட்டிச்சென்ற தமிழர்!

துபாய் டியூட்டி ஃப்ரீ மில்லினியம் டிராவில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீசுனில் ஸ்ரீதரன் என்பவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை இரண்டாவது முறையாக கிடைத்துளள்ளது.

ஸ்ரீசுனில் ஸ்ரீதரன் என்பவர் 20 வருடங்களாக ஐக்கிய அரபு  அமீரகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் துபாய் டியூட்டி ஃப்ரீ மில்லினியம் டிராவில் இரண்டு முறை வெற்றிபெற்று அசத்தியுள்ளார்.

முன்னதாக ஸ்ரீதரன் 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மில்லினியம் டிக்கெட் டிராவில் கலந்துக்கொண்டு 1 மில்லியன் டாலரை வென்றுள்ளார். மேலும் பிப்ரவரி 2020-ஆம் ஆண்டு RANGE ROVER காரையும் இவர் வென்றுள்ளார்.

வெற்றி குறித்து ஸ்ரீதரன் கூறுகையில் “இரண்டாவது முறையாக 1 மில்லியன் டாலர் டிராவில் வெற்றியாளராக ஆக்கிய துபாய் டியூட்டி ஃப்ரீக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மில்லினியம் டிராவில் வெற்றிபெற்று, இரண்டு சொகுசு வாகனங்களுக்கான  குலுக்கல் நடத்தப்பட்டது. அதில் சென்னையைச் சேர்ந்த 61 வயதான புருசோத்தமன் பச்சைராஜ் என்பவர்  BMW R 1250 (Imperial Blue Metallic) காரை வென்றார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap