அமீரகத்ததில் வசித்த ஒரு இந்தியர் சமீபத்திய துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிராவில் $1 மில்லியன் (சுமார் 3.67 மில்லியன் திர்ஹம்ஸ்) வென்றுள்ளார்.
தற்போது உகாண்டாவில் வசிக்கும் 52 வயதான இந்திரனீல் லஹிரி, மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 382 இல் 0874 என்ற வெற்றிகரமான டிக்கெட்டைப் பெற்றுவெற்றி பெற்றுள்ளார்.
துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் பெண்கள் இறுதிப் போட்டியில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அப்போது அந்த மில்லினியம் மில்லியனர் சீரிஸ் டிராக்கான வெற்றியாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
இது குறித்து வெற்றிபெற்ற இந்திரனீல் லஹிரி கூறுகையில், “வெற்றியைப் பற்றி கேள்விப்பட்ட பின்னர் எனக்கும் தூக்கம் வரவில்லை. நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நான் இதுபோன்று பல டிக்கெட்டுகளை வாங்கியுள்ளேன். கடந்த ஆறு மாதங்களாக நான் தொடர்ந்து டிடிஎஃப் டிக்கெட்டுகளை வாங்கி வருகிறேன். இறுதியாக வெற்றிபெற்றது நான் தானா என்று கூட என்னால் நம்ப முடியவில்லை” என்றார்.
உகாண்டாவில் உள்ள ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் பொது மேலாளராக பணிபுரியும் இவர், இந்தியாவில் உள்ள தனது சொந்த ஊரான அலகாபாத்தில் ஒரு வீட்டைக் கட்ட விரும்புவதாகக் கூறினார். அவருக்கு 22 மற்றும் 15 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இந்த பணம் உதவும். அதுமட்டுமின்றி, சில தொண்டு நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட சில தொகையை வழங்க இருப்பதாக தெரிவித்தார்.
பிப்ரவரி 14 முதல் 26 வரை நடைபெறும் துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் முழுவதும், மில்லினியம் மில்லியனர் மற்றும் ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் விளம்பரத்திற்கான டிக்கெட்டுகள் டென்னிஸ் வில்லேஜில் உள்ள துபாய் டூட்டி ஃப்ரீ கவுண்டர்களில் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.