15 மில்லியன் திர்ஹம் பரிசை தட்டி சென்ற இந்தியர்.!

Big Ticket

அபுதாபி ஏர்போர்ட் சார்பாக நடப்படும் இந்த ‘Big Ticket’ ஒவ்வொரு மாதமும் பல சீசன்களாக நடைபெறும். இந்நிலையில், 15 மில்லியன் திர்ஹம் பரிசு தொகைக்கான குழுக்கள் இன்று அபுதாபி ஏர்போட்டில் நடைபெற்றது.

இதில், இந்திய நாட்டை சேர்ந்த ‘ஸ்ரீனு ஸ்ரீதர் நாயர்’ முதல் பரிசு 15 மில்லியன் திர்ஹம் பரிசு தொகையை தட்டி சென்றார். இந்திய மதிப்பில் 28 கோடி 87 லட்சம் 39 ஆயிரம் 500 ருபாய் ஆகும். (தற்போது நிலவரப்படி)

இந்திய நாட்டை சேர்ந்த ‘ஸ்ரீனு ஸ்ரீதர் நாயரை’ வெற்றிபெற வைத்த டிக்கெட் நம்பர் ‘098165’. இந்த டிக்கெட்டை அவர் அக்டோபர் மாதம் 20ந் தேதி வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது நாயர் அமீரகத்தில் வசிக்கவில்லை, இந்தியாவில் தான் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

வீடியோ:

அக்டோபர் மாதம் ‘Big Ticket’ வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல்:

Loading...