UAE Tamil Web

அமீரகம்: வாரிச்சுருட்டிய கடலலை – இந்தியாவைச் சேர்ந்த இளம் தாய் நீரில் மூழ்கி பலியான சோகம்..!

Stock-UAQ-Umm-al-quwain_

அஜ்மானைச் சேர்ந்த இந்தியக் குடும்பம் ஒன்று இன்றுகாலை உம் அல் குவைனில் உள்ள அல் பைட் மெட்வாஹித் கடற்கரைக்குச் சென்றிருக்கிறது. 49 வயதான தந்தை 32 வயதான தாய் மற்றும் 4 வயதான மகள் மற்றும் மகன் கொண்ட இந்தக் குடும்பம் இன்று விடுமுறை என்பதால் கடற்கரையில் நேரம் செலவிட நினைத்திருக்கிறது.

தந்தையும் மகனும் கடல் நீரில் விளையாடிதைப் பார்த்த மகள் தானும் விளையாட வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். உடனே தனது மகளை அழைத்துக்கொண்டு கடலுக்குச் சென்றிருக்கிறார் தாய். திடீரென அப்போது பலமான அலை ஒன்று இருவரையும் கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதனைப் பார்த்தவுடன் பதறி ஓடிவந்த தந்தையால் இருவரையும் மீட்க முடியவில்லை.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார் அவர். இதுகுறித்து காவல்துறைக்கும் தேசிய ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு அவை உடனடியாக வந்தன.

ஒருவழியாக தாயும் சேயும் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டாலும் இருவரின் நிலைமையும் மோசமாக இருந்திருக்கிறது. ஆகவே மருத்துவமனைக்கு இருவரையும் ஆம்புலன்ஸ் ஏற்றிச் சென்றிருக்கிறது. ஆனாலும் துரதிருஷ்டவசமாக தாய் செல்லும் வழியிலேயே உயிரிழந்திருக்கிறார். இருப்பினும் குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய உம் அல் குவைன் காவல்துறையின் காவல் நிலைய விரிவாக்கப் பிரிவின் இயக்குனர் பிரிகேடியர் அல் ஷம்சி,”இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு இன்றுகாலை 9 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்துசென்றன. மீட்கப்பட்டாலும் தாய் மரணமடைந்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக குழந்தை காப்பாற்றப்பட்டிருக்கிறது. கடலில் நீந்துபவர்கள் பாதுகாப்பு உடை அணியவேண்டும். அதிக நீர் பிடிப்புப் பகுதிகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்கவேண்டும். முக்கியமாக குழந்தைகளுடன் கடற்கரைக்கு வருபவர்கள் கூடுதல் கவனமுடன் இருத்தல் வேண்டும்” என்றார்.

Stock-UAQ-Umm-al-quwain_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap