34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

தாயகம் திரும்ப முடியாமல் அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவும் இந்தியப் பெண் வழக்கறிஞர்…!

NAT-AK-INDIAN-WOMAN 2

அமீரகத்தில் கொரோனா காரணமாக நாடு திரும்ப இயலாமல் தவிக்கும் இந்தியர்களுக்கு இலவசமாக சட்ட உதவிகளை செய்து வருகிறார் இந்தியாவைச் சேர்ந்த ஷீலா தாமஸ்.

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆனாலும் ஷீலாவின் பூர்வீகம் கேரளா தான். கடந்த 25 ஆண்டுகாலமாக துபாயில் வசித்துவரும் ஷீலா தான் ஒரு வழக்கறிஞராக இருப்பினும், தன்னை சமூக சேவையாளராகவே முதன்மைப்படுத்த விரும்புகிறார்.

கொரோனா ஏற்படுத்தியிருக்கும் அசாதாராண சூழ்நிலை காரணமாக நாடுதிரும்ப முடியாமல் அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்களுக்கு, குறிப்பாக நீல நிறக் கழுத்துப்பட்டை தொழிலாளர்களுக்கு சிறப்பு விமானங்கள் மூலமாக நாடுதிரும்ப சட்ட ரீதியாக தேவைப்படும் உதவிகளை இலவசமாக செய்துவருகிறார் இவர்.

41 வயதாகும் ஷீலா இதுகுறித்துப் பேசுகையில், எனது போனிற்கு பாதிக்கப்பட்ட அமீரக வாழ் இந்தியர்களிடமிருந்து அழைப்பு வந்தவண்ணம் உள்ளன. என்னால் அவர்களின் கோரிக்கைகளை மறுக்க இயலவில்லை” என்றார்.

NAT-AK-INDIAN-WOMAN16
Image Credit : Gulfnews

வேலையிழந்து அமீரகத்தில் தவித்துவரும் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 2,200 அமீரக வாழ் இந்தியர்களுக்கான நாடு திரும்பும் பணிக்காக தற்போது ஷீலா உழைத்துவருகிறார்.

“இந்த தொழிலாளர்களின் விண்ணப்பங்களில் இன்னும் திருத்தம் செய்யப்பட வேண்டியிருக்கிறது. சிலரின் விசா காலம் முடிவடைந்துவிட்டது. சில காரணங்களுக்காக அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் அவர்களுடைய பாஸ்போர்ட்களை இன்னும் அவர்களிடம் வழங்காமல் இருக்கின்றன. நான் இதுகுறித்த பணிகளை மேற்கொண்டுவருகிறேன்” என ஷீலா தெரிவித்தார்.

“நான் தொழிலாளர்களிடத்தில் பேசி அவர்களுடைய சூழ்நிலையை முதலில் புரிந்துகொள்கிறேன். பிறகு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் பேசி அவர்களுடைய பாஸ்போர்ட் மற்றும் வேண்டிய ஆவணங்களை வாங்கி, அதன்மூலம் சிறப்பு விமானங்களின் வாயிலாக இந்த தொழிலாளர்கள் நாடு திரும்ப மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட ரீதியிலான பணிகளை செய்கிறேன். அதுமட்டுமல்லாது நானும் எனது சக சமூக செயல்பாட்டு நண்பர்களும் இணைந்து உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவுகளை அளிக்கிறோம். வாடகை செலுத்த இயலாமல் தவிக்கும் மக்களின் வாடகையை செலுத்தி, அவர்களின் வீட்டு உரிமையாளர்கள் இந்த கஷ்டப்படும் தொழிலாளர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக்கொள்கிறேன். சிலர் அப்படி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது” எனத் தெரிவித்தார் ஷீலா.

“ஷார்ஜாவின் ரோல்லா (Rolla) பகுதியில் கஷ்டப்படுபவர்களுக்கு உணவு கொடுக்கச் சென்றபோது நடந்ததை நினைவுகூர்கிறார் ஷீலா,” நான் எனது சில நண்பர்களுடன் பசித்திருக்கும் நபர்களுக்கு உணவுகளை வழங்கிவந்தேன். அப்போது, அவர்கள் (தொழிலாளர்கள்) தங்களுடைய பரிதாபமான சூழ்நிலையை எங்களிடம் விவரித்தார்கள். அவர்களில் வேலை இழந்தவர்களும், விசா காலம் முடிவடைந்தவர்களும் இருப்பதைப் பார்த்தேன். சட்ட உதவி வேண்டி வழக்கறிஞரை நாடும் அளவிற்கு தங்களிடத்தில் பணமில்லை என அவர்கள் தெரிவித்தார்கள். இதேபோல பலர் தங்களது வாழ்வில் ஒரு அற்புதம் நிகழ்ந்துவிடாதா? என தங்களுடைய அறைகளிலேயே காத்திருப்பதை அறிந்தேன். அவர்களுக்கு உதவி செய்வதாக முடிவெடுத்தேன்” என்றார் ஷீலா.

அப்போது தனது தொலைபேசி எண்ணை அவர்களிடத்தில் கொடுத்துவிட்டு உதவி வேண்டுமானால் அழைக்கவும் எனச்சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார் ஷீலா. அதன்பின்னர் ஓய்வில்லாமல் ஷீலாவின் போன் அடித்துக்கொண்டே இருந்திருக்கிறது. ஆனால் எந்த அழைப்பையும் ஷீலா உதாசீனப்படுத்தவில்லை.

NAT-AK-INDIAN-WOMAN-
Image Credit : Gulfnews

“ஷார்ஜாவில் உள்ள இண்டஸ்ட்ரியல் ஏரியா 2, இண்டஸ்ட்ரியல் ஏரியா 10, அஜ்மான் ஜர்ஃப், ஷார்ஜா ரோல்லா, துபாயின் முஹைசினாஹ், அல் கூஸ், அல் அவீர் ஆகிய இடங்களில் இருந்து பல இந்தியர்கள் உதவி வேண்டி என்னைத் தொடர்புகொண்டனர். நான் அமீரகத்தில் 25 வருடங்களாக இருக்கிறேன். இந்த மண் எனக்கு எவ்வளவோ செய்திருக்கிறது. அத்தனைக்கும் கைம்மாறு செய்யவேண்டிய நேரம் இது என நினைத்துக்கொண்டேன். அமீரகத்தின் மண்ணில் கஷ்டப்படும் இவர்களுக்கு உதவி செய்ய முடிவெடுத்தேன்” என்றார் ஷீலா.

ஒரு நாளைக்கு 300 பேருக்கு உணவுகளை வழங்கிவரும் ஷீலா,” உணவுப் பொட்டலங்களைத் தயாரிக்க வீட்டில் உதவி கிடைக்கிறது. பசித்திருக்கும் மக்களுக்கு இந்த உணவினை வழங்குகிறோம். எனக்கு இந்தப் பணி பிடித்திருக்கிறது. என்னைத் தொடர்ந்து இன்னும் பலர் இந்த தொழிலாளர்களுக்கு உதவ முன்வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்” என முடித்தார்.

இதையும் படிங்க.!