அபுதாபியில் பிக் டிக்கெட் வாராந்திர ரேஃபிள் டிராவில் 2 நாட்களுக்கு முன் குவைத்தில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த பெண் 250,000 திர்ஹம்ஸ் வென்றார்.
அதுபோன்று பிப்ரவரி 3 ஆம் தேதி நடந்த மாதாந்திர பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவில் இந்தியப் பெண் 22 மில்லியன் திர்ஹம்ஸை பரிசாக வென்றுள்ளார்.
கேரளாவில் மாநிலம் திருச்சூரை சேர்ந்த லீனா ஜலால் என்னும் பெண் அபுதாபியில் கட்டுமான நிறுவனத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர், இவரது நண்பர்களுடன் டிக்கெட் பெற்றதில் 22 மில்லியன் திர்ஹம்ஸ் கிடைத்துள்ளது.
இது குறித்த வெற்றி பெற்ற லீனா ஜலால் கூறுகையில், “பிக் டிக்கெட் டிராவில் வெற்றி பெற்றதாக அழைப்பு வந்தபோது நான் அதை நம்பவில்லை, எனது நண்பர்கள் தான் எனக்கு பிரேங் கால் செய்து கேலி செய்கிறார்கள் என்று நினைத்தேன். வெற்றி பெற்ற பரிசுத் தொகையை நண்பர்கள் அனைவருக்கு பிரித்து பகிரப்படும். இதில் வெற்றி பெற்றதில் என்னை விட எனது நண்பர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். முதல் முதலில் எனது பெயரில் டிக்கெட் வாங்கினேன், அதனால் எனது நண்பர்கள் குழுவில் நான் அதிர்ஷ்டசாலி என நினைக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.