UAE Tamil Web

வீடியோ: துபாயில் யோகா செய்து தனது 10 வது உலக சாதனையை நிகழ்த்திய தமிழ்ப்பெண்..!

yoga amrutha

துபாய் எக்ஸ்போவின் இந்திய பெவிலியனில் நேற்று தமிழகத்தைச் சேர்ந்த அம்ருதா ஆனந்த் M.E ., (M.Sc., M.Phil., Ph.D) யோகநித்ரா என்ற யோகாசனத்தை 22 நிமிடங்கள் மற்றும் 01 வினாடிகள் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

யோகாவில் உலகசாதனை படைப்பது இவருக்குப் புதிதல்ல. இதற்கு முன்னர் 9 முறை உலகசாதனை நிகழ்த்தியுள்ளார். அவற்றை கீழே காணலாம்.

  • 2013 – இல் முதல் உலக சாதனையாக லகு வஜ்ராசனம் என்ற ஆசனாவில் 7 நிமிடம் 30 வினாடிகள் இருந்து உலக சாதனை செய்துள்ளார்.
  • 2014 – இல் இரண்டாம் முதல் உலக சாதனையாக லகு வஜ்ராசனம் என்ற ஆசனாவில் 20 நிமிடம் இருந்துள்ளார். அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்
  • 2015 – இல் மூன்றாம் உலக சாதனையாக 1008 யோகாசனங்களை 2
    மணி நேரத்தில் செய்து உலக சாதனை செய்துள்ளார்.
  • 2015 – இல் நான்காம் உலக சாதனையாக வேகன் யோகா மாரத்தான் 27 மணி நேரம் 30 நிமிடம் செய்துள்ளார்.
  • 2015 – இல் ஐந்தாம் உலக சாதனையாக 108 சூரிய நமஸ்காரம் 18 நிமிடத்தில் செய்துள்ளார்.
  • 2017 – இல் ஆறாம் உலக சாதனையாக 108 யோகாசனத்தை நீரில் மிதந்துகொண்டு செய்துள்ளார்.
  • 2018 – இல் ஏழாம் உலக சாதனையாக 1008 யோகாசனங்களை 4 மணிநேரம் 3 நிமிடத்தில் செய்துள்ளார் (மலேஷியா).
  • 2019 – இல் எட்டாம் உலக சாதனையாக பூர்ண தனுராசனம் 15 நிமிடம் 10 வினாடிகள் செய்துள்ளார் (சீனா பெருஞ்சுவர்)
  • 2020 – இல் ஒன்பதாம் உலக சாதனையாக ஏக பதசனம் 35 நிமிடம் செய்துள்ளார்.

தற்போது, கடந்த 16 ஆம் தேதி எக்ஸ்போவில் யோகநித்ரா என்ற யோகாசனத்தை 22 நிமிடங்கள் மற்றும் 01 வினாடிகள் செய்து உலக சாதனை படைத்துள்ளார் அம்ருதா.

இதனைப் பலரும் நேரில் கண்டுகளித்தனர். அம்ருதா அவர்களின் சாதனை முயற்சியைக் காண கீழே கிளிக் செய்யவும்.

yoga amrutha
3 Shares
Share via
Copy link