UAE Tamil Web

துபாய்: எக்ஸ்போவில் யோகாசனம் செய்து உலக சாதனை படைக்க இருக்கும் தமிழ்ப்பெண் – மிஸ் பண்ணிடாதீங்க..!

தமிழகத்தைச் சேர்ந்த அம்ருதா ஆனந்த் M.E ., (M.Sc., M.Phil., Ph.D) வரும் டிசம்பர் 16 ஆம் தேதி துபாய் எக்ஸ்போவில் யோகா செய்து உலக சாதனை படைக்க இருக்கிறார். எக்ஸ்போவின் இந்திய பெவிலியனில் இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது.

பல உடல் உபாதைகளுக்கு காரணமாக உள்ள உடல் பருமனைக் குறைக்கும் விழிப்புணர்வு நடவடிக்கையை இவர் மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் மருந்தில்லா உலகம் என்ற இலக்கோடு இவர் பயனித்துவருகிறார்.

டிசம்பர் 16 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. அமெரிக்காவில் இயங்கும் யோகா அலைன்ஸ் நிறுவனத்தில் வழி நடத்தும் ஆசிரியராக உள்ள அம்ருதா இதுவரை 9 உலக சாதனைகளை செய்திருக்கிறார். அவை,

  • 2013 – இல் முதல் உலக சாதனையாக லகு வஜ்ராசனம் என்ற ஆசனாவில் 7 நிமிடம் 30 வினாடிகள் இருந்து உலக சாதனை செய்துள்ளார்.
  • 2014 – இல் இரண்டாம் முதல் உலக சாதனையாக லகு வஜ்ராசனம் என்ற ஆசனாவில் 20 நிமிடம் இருந்துள்ளார். அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்
  • 2015 – இல் மூன்றாம் உலக சாதனையாக 1008 யோகாசனங்களை 2
    மணி நேரத்தில் செய்து உலக சாதனை செய்துள்ளார்.
  • 2015 – இல் நான்காம் உலக சாதனையாக வேகன் யோகா மாரத்தான் 27 மணி நேரம் 30 நிமிடம் செய்துள்ளார்.
  • 2015 – இல் ஐந்தாம் உலக சாதனையாக 108 சூரிய நமஸ்காரம் 18 நிமிடத்தில் செய்துள்ளார்.
  • 2017 – இல் ஆறாம் உலக சாதனையாக 108 யோகாசனத்தை நீரில் மிதந்துகொண்டு செய்துள்ளார்.
  • 2018 – இல் ஏழாம் உலக சாதனையாக 1008 யோகாசனங்களை 4 மணிநேரம் 3 நிமிடத்தில் செய்துள்ளார் (மலேஷியா).
  • 2019 – இல் எட்டாம் உலக சாதனையாக பூர்ண தனுராசனம் 15 நிமிடம் 10 வினாடிகள் செய்துள்ளார் (சீனா பெருஞ்சுவர்)
  • 2020 – இல் ஒன்பதாம் உலக சாதனையாக ஏக பதசனம் 35 நிமிடம் செய்துள்ளார்.

தற்பொழுது துபாயில் நடக்கும் எக்ஸ்போ-2020 நிகழ்ச்சியில் 16.12.2021 அன்று இந்தியன் பெவிலியன் அரங்கில் யோகநித்ரா என்ற யோகாசனத்தை உலக சாதனையாக மாலை 4.30 மணி அளவில் செய்ய உள்ளார்.

வாய்ப்புள்ளோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap