மஹ்சூஸின் சமீபத்திய கோடீஸ்வரராக மாறியுள்ள அபுதாபியைச் சேர்ந்த இந்திய வெளிநாட்டவர் விபினுக்கு அவர் நீண்டகாலமாக எதிர்பார்த்து இருந்த திருமணம் இறுதியாக ஒரு நிஜமாக மாற உள்ளது.
திருமணம் செய்துகொள்ள ஆசை இருந்தாலும் குறைந்த வருமானம் காரணமாக சிரமங்களை எதிர்கொண்ட வெற்றியாளருக்கு 1 மில்லியன் திர்ஹம் பரிசுத் தொகை வாழ்கையை மாற்றும் பரிசாக வந்துள்ளது.
அபுதாபியில் உள்ள தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய வெளிநாட்டவரான விபின், மே 20 சனிக்கிழமையன்று, 1 மில்லியன் திர்ஹம்களின் ‘உத்தரவாத’ ரேஃபிள் பரிசை வென்ற பிறகு, மஹ்சூஸின் 44வது மில்லியனர் ஆனார்.
129வது டிராவில் கூடுதலாக 1,645 வெற்றியாளர்கள் பரிசுத் தொகையாக 1,601,500 திர்ஹம்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
தீவிர கால்பந்து வீரராகவும் உள்ள விபின், இரண்டு வருடங்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வருகிறார், மேலும் நான்கு மாதங்களுக்கு முன்புதான் மஹ்சூஸில் பங்கேற்கத் தொடங்கினார், அதிலிருந்து குறைந்தபட்சம் 30 லைன்களை வாங்கினார்.
இப்பொழுது அவருக்கு அதிர்ஷ்டம் கைகூடி உள்ளது.அவர் ரேஃபிள் பரிசை வென்றதை உணர்ந்தபோது முதலில் நினைத்தது அவரது நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த திருமணத்தை எப்படி முடிக்கலாம் என்பதை பற்றி தான்.
அவர் திருமணத்தைப் பற்றி ஏற்க பல கனவுகள் கட்டி வைத்திருந்ததால் தனது வருமானத்தில் அது எப்படி முடிப்பது என்று கவலை அவர் மனதுக்குள் இருந்தது.
ஏனென்றால் அவரது திருமண சம்பிரதாய நிகழ்வுகள் மிகவும் விலை உயர்ந்தவை. 1 மில்லியன் திர்ஹம் வென்றதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், அதனால் நான் விரும்பும் நபருடன் இறுதியாக முடிச்சுப் போட முடியும்” என்கிறார் விபின்.
புதிய கோடீஸ்வரர் தனது மூத்த சகோதரருக்கு ஒரு காரை பரிசாக கொடுத்து அவரை சர்ப்ரைஸ் ஆக வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார். மேலும் அவரது சொந்த ஊரில் தனக்கென்று புதிதாக வீடு வாங்க வேண்டும் என்னும் தெரிவித்தார்.
மஹ்ஸூஸுடன் விபினின் முதல் வெற்றி இதுவல்ல – அவர் தனது மூன்றாவது சோதனையில் 350 திர்ஹம் வென்றார். தற்பொழுது அதிர்ஷ்டம் எப்போதும் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபித்தார்.
வெற்றியாளர் தான் வெற்றி பெற்றதைக் கண்டுபிடித்த தருணத்தை அன்புடன் விவரிக்கிறார். “என்னால் முதலில் நம்ப முடியவில்லை. நான் எனது இரவுப் பணியைச் செய்துகொண்டிருந்தேன், வீட்டிற்கு வந்து வைஃபையுடன் இணைந்தவுடன், மஹ்சூஸிடமிருந்து நான் வெற்றி பெற்றதாக மின்னஞ்சல் அறிவிப்பு வந்தது!
நான் அதிர்ச்சியடைந்து, எனது மொபைலில் எனது மஹ்சூஸ் கணக்கைச் சரிபார்க்க விரைந்தேன். இந்தியாவைச் சேர்ந்த எனது வருங்கால மனைவியை நான் வெற்றி பெற்றதாக நம்ப வைக்க முயற்சித்தேன், ஆனால் எனது மஹ்சூஸ் கணக்கின் ஸ்கிரீன் ஷாட்டைக் காண்பிக்கும் வரை அவள் என்னை நம்பவில்லை என்று மகிழ்ச்சியுடன் அவர் வெற்றி பெற்ற தருணத்தை விவரித்தார்.
இந்தியர்கள் உழைப்பதற்காக அரபு நாட்டுக்கு சென்றாலும் அவ்வப்போது இப்படி கிடைக்கும் பரிசுத்தொகையானது நாமும் விரைவில் கோடீஸ்வரர் ஆகிவிடுவோம் என்ற கனவினை உண்மையாகி கொண்டிருக்கின்றது.