அபுதாபி பிக் டிக்கெட் ரேஃபில் சிரீஸ் 230ல் இந்தியர் ஒருவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. கடந்த ஜூலை 13ம் தேதி 183947 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கிய சனூப் சுனில் என்பவருக்கு 15 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையாக கிடைத்துள்ளது. பிக் டிக்கெட் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்ட், சுனில் வெற்றிபெற்றதை அறிவிக்க தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. பல முறை முயற்சித்தும் பதில் இல்லை. பின்னர் இணைப்பு கிடைத்ததும் சுனில் வெற்றிபெற்றதை ரிச்சர்ட் உற்சாகத்துடன் தெரிவிக்க, எந்தவித பதிலும் கிடைக்காமல் இணைப்பு மீண்டும் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் சுனிலை தொடர்பு கொண்டு இந்த பரிசுத்தொகை அவரிடம் சேர்க்கப்படும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல அபுதாபியில் வசிக்கும் மற்றொரு இந்தியரான ஜான்சன் என்பவருக்கு 2ம் பரிசாக 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையாக கிடைத்துள்ளது. கடந்த ஜுலை 16ம் தேதி வாங்கிய 122225 என்ற எண் கொண்ட டிக்கெட் 2ம் பரிசை தட்டிச் சென்றிருக்கிறது. 5, 7,8,9,10ம் இடத்தையும் இந்தியர்களே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.