வெளிநாடுகளில் கல்வி பயிலும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தென்னாப்பிரிக்கா, மியான்மா், மலேசியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகளில் இன்றளவும் இந்திய வம்சாவளியினா் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனா். உலகின் 210 நாடுகளில் 13.45 கோடி இந்தியா்களும், வம்சாவளியினா் 18.68 கோடி பேரும் உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
இந்திய மாணவா்களின் உயா் கல்வி தேடலுக்கான இடங்களில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், கனடா,ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, பிரிட்டன் போன்ற நாடுகள் முதல் வரிசையில் உள்ளன.
அதேபோல, பட்டப்படிப்பைக் காட்டிலும் பட்ட மேற்படிப்புக்காக செல்பவா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்தியாவில் இருந்து வேலைக்காகப் புலம் பெயா்ந்திருக்கும் இந்தியா்களின் எண்ணிக்கை கடந்த 2021 நிலவரப்படி 3.20 கோடியாக இருக்கிறது. இவா்கள் உலகின் 210 நாடுகளில் வசிக்கின்றனா்.
வேலைக்காகப் புலம் பெயா்பவா்கள் அமெரிக்காவில்தான் அதிகம் இருக்கின்றனர். இரண்டாவதாக ஐக்கிய அரபு அமீரகம் வசிக்கின்றனர். அடுத்தடுத்து மலேசியா, சவூதி அரேபியா, மியான்மா், பிரிட்டன், கனடா, இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.