37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

புதிய விசிட் விசாக்களை மீண்டும் வழங்கத் துவங்கியது துபாய் – இந்தியர்கள் மகிழ்ச்சி..!

NAT-UAE-VISA

அமீரகத்திற்கு வெளியே உள்ள மக்கள் இனி துபாய்க்கு புது விசிட்டிங் விசாவில் வரலாம் என அறிவிக்கப்பட்டிருப்பது இந்தியர்களிடையே மகிழ்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய்த்தொற்று காரணமாக புதிய விசிட் விசா வழங்குவதை அமீரகம் நிறுத்தியிருந்தது.

இந்நிலையில் துபாயில் உள்ள வெளியுறவுத்துறை மற்றும் குடியிருப்பாளர்களுக்கான தலைமை இயக்குனரகம் (GDRFA) புதிய விசிட் விசாக்களை வழங்குவதாக அமர் மையங்கள், டிராவல் ஏஜென்ட்கள் மற்றும் விசா விண்ணப்பதாரர்கள் கல்ஃப் செய்தி நியூஸ் நிறுவனத்திடம் தெரிவித்திருப்பதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியர்களின் புதிய விசாக்களுக்கான விண்ணப்பங்களை செவ்வாய்க்கிழமை இரவு முதல் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது GDRFA. புதிய விசிட் விசாக்கள் இன்று (புதன்கிழமை) காலை முதல் GDRFA மூலம் வழங்கப்படுவதாக அமர் மையங்கள் மற்றும் டிராவல் ஏஜென்ட்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக கல்ஃப் நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்தியா உட்பட அமீரகத்தை விட்டு வெளியே இருக்கும் பிற நாட்டினரின் புதிய விசிட் விசா விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க.!