UAE Tamil Web

அபுதாபி விமான நிலையத்திற்கு வருகைதந்த 2.56 மில்லியன் பயணிகளில் இந்தியர்கள் முதலிடம்..!

abudhabi airport

2022 முதல் காலாண்டு பகுதியில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தந்த பயணிகளின் எண்ணிக்கையை விமான நிலைய தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார்.

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்களின்படி, அபுதாபி விமான நிலையத்திற்கு 2.56 மில்லியன் பயணிகள் வருகைதந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

இது தொடர்பாக அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் தலைமை அதிகாரி ஷரீஃப் ஹாஷிம் அல் ஹஷ்மி கூறுகையில், “2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 807,310 பயணிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது 2,563,297 பயணிகள் அபுதாபி விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். உலகம் முழுவதும் கோவிட்-19 தொடர்பான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் போக்குவரத்து மீண்டும் 218% அதிகரித்துள்ளது.

மேலும் 2021-இல் அபுதாபி விமான நிலையத்தில் 16,351 விமான போக்குவரத்துக்கள் நடைபெற்றது, ஆனால், தற்போது உள்ள காலாண்டில் 22,689 விமான போக்குவரத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காலாண்டு பகுதியில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு 515,927 பயணிகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களாகும்.

அதற்கு அடுத்தப்படியாக, பாகிஸ்தான் (253,874), இங்கிலாந்து (170,620), சவுதி அரேபியா (137,582) மற்றும் எகிப்து (127,009) ஆகும்.

மேலும்  இக்காலாண்டு பகுதியில் அபுதாபி விமான நிலையத்தில் இருந்து அதிக போக்குவரத்து நடந்த இடங்களாக லண்டன் (123,055), டெல்லி (103,472), இஸ்லாமாபாத் (101,476), கொச்சி (90,022) மற்றும் டாக்கா (89,272) ஆகியவை அடங்கும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap