கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற ஆப்கள் மக்களிடையே தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்திய அரசு தரப்பில் பீம் (BHIM) என்ற மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மொபைல் ஆப்கள் UPI முறையில் செயல்படுகின்றன. இது ஆன்லைன் மூலமாகப் பணம் அனுப்பும் வசதியாகும்.
இந்நிலையில் தற்போது யூபிஐ வசதி அமீரக நாட்டில் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவு ஆணையம் (NPCI) தெரிவித்துள்ளது.
இதற்காக அங்குள்ள MASHERQ வங்கியுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பொதுவாக வெளிநாடு செல்பவர்கள் அங்கு எதையாவது வாங்க நினைத்தால் அங்குள்ள பணத்தைக் கொண்டே வாங்க முடியும். ஆன்லைன் பரிவர்த்தனை வசதி அவ்வளவாக இருக்காது.
இந்நிலையில் தற்போது அமீரகத்தில் இந்த வசதி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. எனவே அந்நாட்டுக்கு இனி செல்பவர்கள் இனி தாராளமாக ஷாப்பிங் செய்யலாம்.