துபாய் சர்வதேச விமான விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளில் ஒரு ஓடுபாதையை மே மாதம் முதல் 45 நாட்களுக்கு மூடப்பட இருப்பதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த ஓடுபாதையை மூடல் காரணமாக கோடைகால தொடக்கத்திற்கு முன் விமான சேவைகளும் குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மே மற்றும் ஜூன் மாதத்தில் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஒரு ஓடுபாதை மூடப்படுவதால், தற்காலிகமாக சில விமானங்கள் துபாய் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திலும் துபாய் வேர்ட்டு செண்டர் DWC விமான நிலையத்திலும் தரையிறைக்கப்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
துபாய் விமான நிலையத்திற்குச் செல்லும் விமானங்களை ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள், துபாய் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கும், DWC விமான நிலையலயத்திற்கும் தரையிறக்கப்படும் விமானங்களின் அட்டவணை மற்றும் முன்பதிவு குறித்து இண்டிகோ விமான மையம் அல்லது அலுவலகங்கள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.