UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியா – அமீரகம் இடையே விமான சேவை தொடரும் – இண்டிகோ அறிவிப்பு..!

indigo

நாளை முதல் இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு வழக்கம்போல விமானங்கள் இயக்கப்படும் என இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “விமான இயக்கத்தில் சில சிக்கல்கள் இருப்பதால் ஒரு வாரத்திற்கு அதாவது ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இயக்கப்பட இருந்த அனைத்து விமானங்களையும் ரத்து செய்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கம் போல விமானங்கள் இயக்கப்படும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ பயணிகள் சிலர் அமீரக அரசு விதித்திருந்த பயண விதிமுறைகளை மீறியதால் பயணத்தடையை அந்நிறுவனம் அறிவித்ததாக கூறப்படுகிறது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இண்டிகோவின் அறிக்கையில்,” விமான சேவை மீண்டும் நாளை முதல் தொடரும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். பயணிகள் யாரேனும் சிரமங்களை சந்தித்தால் நிறுவனம் வருத்தம் தெரிவிக்கிறது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

indigo
5 Shares
Share via
Copy link