UAE Tamil Web

அமீரக வாழ் இந்தியத் தொழிலாளர்களுக்கு “திறன் பயிற்சிப் பட்டறை” நடத்திய இந்திய துணைத் தூதரகம்..!

workers

அமீரகத்தில் வேலைபார்த்துவரும் பல நீல நிறக் கழுத்துப்பட்டை தொழிலாளர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்கிடும் நோக்கில் பல்வேறு திறன் வளர் சிறப்பு வகுப்புகளை துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் நடத்திவருகிறது.

இதன் ஒருபகுதியாக, நேற்று டல்ஸ்கோ நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கான பயிற்சி பட்டறை ஒன்று நடத்தப்பட்டது. இதில் டல்ஸ்கோ நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த கொத்தனார், எலெக்ட்ரீஷியன், பிளம்பர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு “அணுகுமுறை மற்றும் மனநிலை ” (Attitude and Mindset) குறித்து ஷார்ஜாவின் ஸ்கைலைன் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த நிபுணர்கள் பயிற்சி அளித்தனர்.

workers
0 Shares
Share via
Copy link