அமீரகத்தில் நேற்று இரவு முழுவதும் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால், அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பனிமூட்டத்தின் போது சாலைகள் சரிவர தெரியாததால், குடியிருப்பாளர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அபுதாபி காவல் துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.
வாகன ஓட்டிகள் சாலைகளில் வேகமாக பயணிப்பதை குறைத்துவிட்டு, கவனத்துடன் செல்லவும், போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனத்தை இயக்குமாறும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால் பிரதான சாலைகளில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் வாகனத்தை ஓட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமீரகத்தின் இன்றைய வானிலை மேகமூட்டத்துடன் இருக்கும், இரவு முதல் நாளை காலை வரை ஈரப்பதம் நிலவும், சில பகுதிகளில் மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும் மிதமான காற்று வீசக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM)தெரிவித்துள்ளது.
