UAE Tamil Web

துபாய், அபுதாபி இடையேயான Intercity Bus சேவை மீண்டும் தொடங்கியது.. கட்டணம் எவ்வளவு? – RTA வெளியிட்ட பல முக்கிய தகவல்கள்

அமீரகத்தில் உள்ள வெவ்வேறு இடங்களுக்கு இடையில் பயணம் செய்ய வேண்டுமா? துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் புஜைரா இடையே மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நகரங்களுக்கு இடையேயான பேருந்து வழித்தடங்களைப் பயன்படுத்தி உங்கள் பணத்தைச் சேமிக்கலாம்.

இன்று (மே 19), துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அமீரகத்தின் பல பகுதிகளை இணைக்கும் நான்கு இன்டர்சிட்டி பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. அமீரகம் முழுவதும் இயக்கப்படும் RTA பேருந்துகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எப்படி பயன்படுத்த முடியும்? மற்றும் அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை தற்போது காணலாம்.

துபாய், அபுதாபி, ஷார்ஜா, புஜைரா இடையே உள்ள பேருந்து வழித்தடங்கள் தான் தற்போது RTA மூலம் மீண்டும் தொடங்கப்பட்ட நான்கு இன்டர்சிட்டி பேருந்து வழித்தடங்கள் ஆகும்.

அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து அபுதாபி மத்திய பேருந்து நிலையத்திற்கு E100 என்ற சேவை துபாய் அல்லது அபுதாபியில் இருந்து நாள் முழுவதும் இந்த பேருந்தில் செல்லலாம். 30 முதல் 40 நிமிட இடைவெயில் பேருந்துகள் இயங்கும் – டிக்கெட் விலை Dh25.

அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து அல் ஐனுக்கு E201 என்ற சேவை இயங்கும், துபாயில் இருந்து முதல் பேருந்து காலை 6.20 மணிக்கும், கடைசி பேருந்து இரவு 9.20 மணிக்கும் புறப்படும். ஒரு மணி நேர இடைவெளியில் பேருந்துகள் இயங்கும்.

அல் ஐனிலிருந்து துபாய்க்கும் மேற்குறிய அதே பேருந்தில் செல்லலாம், முதல் பேருந்து காலை 6 மணிக்கும், கடைசி பேருந்து இரவு 9 மணிக்கும் புறப்படும். ஒரு மணி நேர இடைவெளியில் பேருந்துகள் இயங்கும், டிக்கெட் விலை Dh25.

E315 என்ற பேருந்து சேவை எடிசலாட் மெட்ரோ நிலையத்திலிருந்து ஷார்ஜாவின் முவைலே பேருந்து முனையத்திற்கு செல்லும். நாளின் முதல் பேருந்து காலை 5 மணிக்கும், கடைசி பேருந்து இரவு 11 மணிக்கும் புறப்படும். ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியில் பேருந்துகள் செயல்படுத்தப்படும்.

அதே போல ஷார்ஜாவிலிருந்து துபாய்க்கு மேற்குறிய அதே பேருந்தில் செல்லலாம், முதல் பேருந்து காலை 5.20 மணிக்கும், கடைசி பேருந்து இரவு 11 மணிக்கும் புறப்படும். 20 முதல் 30 நிமிட இடைவெளியில் பேருந்துகள் இயங்கும். டிக்கெட் விலை Dh12.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap