அமீரக வாழ் தமிழரான ஷஹீத் ரஹ்மான், இதுவரையில் இரண்டு தமிழ் பாடலை இயக்கி வெளியிட்டுள்ளார். முழுவதும் அமீரகத்திலேயே பாடல்கள் உருவானாலும் தமிழ் வாசம் வீசும் இவரது படைப்புகள் அமீரக வாழ் தமிழர்கள் மட்டுமன்றி உலகமெங்கிலும் பலராலும் தினந்தோறும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
புதிய பாடல்
இந்நிலையில் ஷஹீத் ரஹ்மான் குழு தற்போது புதிய பாடல் ஒன்றினை தயாரிக்கும் பணியில் களமிறங்கியுள்ளது. இதில் பெண் பின்னணிப் பாடகிக்கான குரல் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருப்பதாக ரஹ்மான் தெரிவித்தார்.
தற்போது அமீரகத்தில் வசித்துவரும் நல்ல தமிழ் உச்சரிப்பும், பாடல் பாடும் ஆர்வமும் உள்ளவர்கள் (பெண்கள் மட்டும்) தங்களைத் தொடர்புகொள்ளலாம் என குழு தெரிவித்துள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் connect@shaheedrahman.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
ஷஹீத் ரஹ்மான் குழுவின் பாடல்களைக் கேட்க கீழே கிளிக் செய்யவும்.