வானுயர கட்டிடங்கள் துவங்கி அசத்தலான வரலாற்று நினைவுகள் வரை வடிவமைத்து வைத்திருக்கும் துபாய் ஒரு பெரிய பனைமர அமைப்பினை கொண்டது. இந்த நாட்டினை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்குமே இருக்கத்தான் செய்யும். அப்படி இருக்கும் துபாய் காஸ்ட்லி நகரம் தான். ஆனால் இங்கு நீங்க செல்லும் போது இதெல்லாம் முற்றிலும் freeஆக என்ஜாய் செய்ய முடியும்.
துபாயிற்கு சுற்றுலா வரும் பயணிகள் கண்டிப்பாக முன்னாள் ஆட்சியாளராக இருந்த ஷேக் ஷாகித் அல்மோகோம் வாழ்ந்த இடத்தினை பார்வையிட வேண்டும். அது தற்போது heritage villageஆக காட்சிக்கு இருக்கிறது. இங்கு துபாயின் கலாச்சார படைப்புகள், முத்து குளிப்பது உள்ளிட்ட தகவல்களுக்கும் தனித்தனியாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தினை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க கட்டணம் எதுவுமே கிடையாது.
துபாயில் பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி முற்றிலும் இலவசமாக நடைபெற்று வருகிறது. இது நாட்டின் பல்வேறு இடங்களில் ஃப்ரண்ட் ஆஃப் யோகா அமைப்பு காலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை. மாலையில் 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது.
நட்சத்திரங்களின் கீழ் ஓய்யாரமாக படுத்திக்கொண்டே இலவசமாக படம் பார்க்க வேண்டும் என்றால் வேண்டாம் என சொல்ல முடியுமா? அந்த வசதியை செய்து கொடுத்து இருக்கிறது வாவி மால். அதுவும் முற்றிலும் ஃப்ரீயாக தான். பிரமிட் மாதிரியான திறந்தவெளி மாடியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் படங்கள் திரையிடப்படும்.
துபாய் மாலில் இருக்கும் அக்வாரியத்தினை கூட ஃப்ரீயா பார்க்கலாம். ஆமாம் துபாய் மாலின் வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரதான தொட்டியினை அக்ரிலிக் பேனல் மூலம் பார்க்க முடியும். 30 ஏக்கர் பரப்பளவில் புர்ஜ் கலீஃபா ஏரியில் அமைக்கப்பட்டுள்ள நடன நீருட்று உலகின் மிக உயரமான செயற்கை நீருட்றில் இரண்டாவது இடம் பிடித்து இருக்கிறது. இதை கண்டுக்காண எந்த வித கட்டணமும் இல்லை.
தெய்ரா பழைய மார்க்கெட்டில் விண்டோ ஷாப்பிங் செய்யலாம். அதாங்க எதையுமே வாங்காமல் சும்மா வேடிக்கை பார்க்க முடியும். அந்த பரபரப்பான அங்காடியை பார்க்கவே ஆயிரம் கண் வேண்டும் என்கிறார்கள்.
துபாயில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தெய்ரா மீன் மார்க்கெட் அருகில் நடக்கும் ஃபெல்வானி மல்யுத்த போட்டி. இதைக்காணவும் எந்தவித கட்டணமும் இல்லை. இதெல்லாம் பெரிய விஷயமாக எனக் கேட்டீங்கனா? ஒரு பெரிய விஷயமும் இருக்கு. டிஜே பாட்டு போட நவநாகரீக மக்களுடன் ஆட்டம் போட கிளப் கிடைத்தால் அப்படி ஒரு இடமும் இருக்கிறது.
துபாயில் இயங்கும் Societe க்ளிப்பில் எண்ட்ரிக்கு எந்தவித கட்டணமும் இல்லை. அதிலும் வெள்ளிக்கிழமை போடும் பாட்டுக்களுக்கும் தான் ரசிகர்கள் அதிகம் எனக் கூறப்படுகிறது.