UAE Tamil Web

இந்தியாவில் 2 வருடங்களுக்கு பிறகு சர்வதேச விமான சேவைக்கு அனுமதி..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து வரும் 27 ஆம் தேதி முதல் சர்வதேச விமானச் சேவைக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2020 ஆம் ஆண்டு முதல் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டதோடு உயிரிழப்புகள் அதிகரித்தது. இதன் காரணமாக, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கடைகள், சுற்றுலாத் தளங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. பொது போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இதனிடையே வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டன. அதுமட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் சர்வதேச விமானங்களை தவிர்த்து, அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.

கொரோனா சற்று குறைந்த நிலையில் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கும் அறிவிக்கப்பட்டது. அப்போது ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி மக்களை பீதியில் ஆழ்த்தியது.

இதன் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்ட உத்தரவை, மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதை அடுத்து சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடையை பிப்ரவரி 28 ஆம் தேதி நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து வரும் 27 ஆம் தேதி முதல் சர்வதேச விமானச் சேவைக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் இந்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து விமானச் சேவையைத் தொடங்கலாம் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் தெளிவுபடுத்தி உள்ளது.

இதன் மூலம் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap