இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துத் தடையை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை பிப்ரவரி 28 வரை நீட்டித்து வைத்திருந்த நிலையில், தற்போது மறு அறிவிப்பு வரும் வரை தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த தடை உத்தரவானது சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23 முதல் இந்தியாவுக்குச் செல்லவும், புறப்படவும் அனைத்து சர்வதேச விமானங்களுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த தடைகள் உத்தரவு ஒவ்வொரு மாதமும் விலக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 15 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதாக இந்திய அரசு அறிவித்திருந்தது.
பின்னர் உலகமெங்கும் ஓமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக தொடங்கவிருந்த விமானப் போக்குவரத்து ஒத்தி வைக்கப்பட்டு தற்போது மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அமீரகம், கத்தார், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் AIR BUBBLE ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் இந்த நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் விமான சேவைகள் தொடர்ந்து இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.