UAE Tamil Web

துபாயை தொடர்ந்து ஷார்ஜாவிலும் இலவச பார்ங்கிங் வசதி அறிமுகம்

ஷார்ஜாவில் உள்ள கட்டண வாகன நிறுத்துமிடங்களில் ஈத் அல் ஃபித்ரின் முதல் நாள் முதல் மே 5 வரை இலவசமாக பார்கிங் செய்து கொள்ளலாம் என்று ஷார்ஜா எமிரேட் அறிவித்துள்ளது.

ஷவ்வால் 1 முதல் பார்க்கிங் இலவசம், அதாவது அடுத்த இஸ்லாமிய மாதத்தின் பிறை சனிக்கிழமை ரமலான் 29 அன்று பிறை காணப்பட்டால், ஞாயிற்றுக்கிழமை மே 1 முதல் பார்க்கிங் இலவசம். இல்லையெனில், திங்கள் மே 2 முதல் வியாழன் வரை பார்க்கிங் வசதி இலவசம்.

இந்த ஆண்டு, வானியல் கணக்கீடுகளின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் பித்ர் மே 2 அன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கு 9  நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஷார்ஜாவும், ஊழியர்களுக்கான 9 நாட்கள் விடுமுறையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap