UAE Tamil Web

அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமான ஆப்பிள் ஐபோன் 13: அமீரகத்தில் விலை என்ன?

ஆப்பிள் நிறுவனத்தின் 2021 கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதிய ஐபேட் மற்றும் ஐபேட் மினி மாடல்களில் துவங்கி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7, ஐபோன் 13, ஐபோன் 13 மினி, 13 ப்ரோ, 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 வகைகளில் செல்ஃபோன்களை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஆகியவை முறையே 128 ஜி.பி, 256 ஜி.பி, 512 ஜி.பி மெமரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

13 ப்ரோ மற்றும் 13 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றில் மேற்கூறியவற்றுடன் 1 டி.பி. மெமரி மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாடல்களிலும் முன்பக்கம் கேமரா 12 மெகா பிக்சல் ஆகும். 13 மற்றும் 13 மினி ஆகிய மாடல்களில் டூயல் 12 எம்பி வைடு மற்றும் அல்ட்ரா வைடு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 13 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் ப்ரோ 12 எம்.பி. டெலிபோட்டோ வைடு மற்றும் அல்ட்ரா வைடு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புகைப்படங்களை துல்லியமாக எடுக்க முடியும். அதிகபட்சமாக 28 மணிநேரம் வரை வீடியோக்களை தொடர்ச்சியாக பார்க்க முடியும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. இவை அனைத்தும் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ஆப்பிள் ஐபோன் 13ன் விலை 3,399 திர்ஹமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஐபோன் 13 மினி 2,999 திர்ஹம்ஸ், ஐபோன் 13 ப்ரோ 4,199 திர்ஹம்ஸ், ஐபோன் ப்ரோ மேக்ஸ் 4,699 திர்ஹம்ஸ் ஆக விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஐபோன் 13 மாடல்களுக்கான முன்பதிவு இம்மாதம் 17ம் தேதி தொடங்குகிறது. அமீரக நேரப்படி மாலை 4 மணி முதல் முன்பதிவு ஆரம்பமாகும். செப்டம்பர் 24ம் தேதி முதல் செல்போன்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஐ போன் 13 சீரீஸுடன் ஐ பேட் (9th Gen), ஆப்பிள் வாட்சி சீரிஸ் 7 ஆகியவையும் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

7 Shares
Share via
Copy link
Powered by Social Snap