35.9 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

அமீரகம் வரும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி – சூடு பிடிக்கத் துவங்கும் IPL 2020..!

CSK_skipper_MS_Dhoni_resources1_

இந்த வருடத்திற்கான IPL போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் என IPL குழுத் தலைவர் பிரிஜேஷ் படேல் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் IPL ன் தவிர்க்க முடியாத அணியான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அடுத்த வாரத்தில் அமீரகம் வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ (ESPNcricinfo) வெளியிட்டுள்ள தகவலின்படி CSK அணி நிர்வாகம் அணியினர் அனைவரையும் சென்னைக்கு அழைத்திருக்கிறது. பின்னர் அங்கிருந்து அரசு அனுமதியுடன் தனி விமானம் மூலமாக துபாய்க்கு CSK வீரர்கள் பயணிப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

51 நாள் கொண்டாட்டம்

நாளை (ஆகஸ்டு 2) IPL ஆளும் கவுன்சில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் தொடரின் அட்டவணை இறுதி செய்யப்படுதல், முக்கிய முடிவுகளை எடுத்தல், தொடருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுதல் ஆகிய பணிகள் குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மைதானங்களில், 51 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த ஆண்டிற்கான IPL போட்டிகளில் தங்களது வெற்றியை உறுதிசெய்யும் விதமாக கடந்தாண்டு டிசம்பரிலேயே CSK அணியின் மூத்த வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் வலைப் பயிற்சியைத் துவங்கிவிட்டனர்.

ஆனால் கொரோனா காரணமாக மார்ச் 29 ஆம் தேதி நடைபெற இருந்த IPL போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் செப்டம்பர் 19 ஆம் தேதி அமீரகத்தில் IPL போட்டிகள் துவங்கும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

IPL ன் 13 வது சீசனில் கலந்துகொள்ளும் முனைப்போடு ஆகஸ்டு 10 ஆம் தேதிக்கு முன்னரே CSK அணி அமீரகம் வர இருக்கிறது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க.!