UAE Tamil Web

அமீரகத்தில் துவங்கும் IPL திருவிழா – ரசிகர்கள் உற்சாகம்..!

கிரிக்கெட் ரசிகர்களின் ஆகப்பெரும் கொண்டாட்டங்களில் ஒன்றான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் இந்தியாவில் நடைபெறுவது வழக்கம். 13வது சீசன் தொடங்கியபோது கொரோனா 2வது அலை வேகமாக பரவியதால் ஐபிஎல் போட்டி கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தியாவில் உள்ள 6 மைதானங்களில் மட்டும் பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் போட்டிகள் ஆரம்பமான நிலையில் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதியானதால் மே 2ம் தேதியுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பேசப்பட்டு வந்த நிலையில் நேற்று பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Imageஅதன்படி எஞ்சிய 31 போட்டிகள் 27 நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறும் என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 19ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை – சென்னை அணிகள் துபாயில் பலப்பரிட்சை நடத்துகின்றன. Imageஅக்டோபர் 15ம் தேதியுடன் போட்டி முடிவடைகிறது. இறுதிப்போட்டி துபாயில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. வீரர்கள் நலன் கருதி கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளுடன் பாதுகாப்பான முறையில் ஐபிஎல் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து இன்னும் முடிவாகவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியாவின் மாபெரும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளதால் ஒவ்வொரு ஆட்டத்திலும் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது!

5 Shares
Share via
Copy link