ஈரானில் இன்று புதன்கிழமை காலை ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இங்கு நமது துபாயில் வசிப்பவர்கள் லேசான அதிர்வுகளை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர்.
தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, நிலநடுக்கம் தெற்கு ஈரானில் காலை 10.06 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானது என்று கூறியுள்ளது. இது நாட்டில் வசிப்பவர்களால் உணரப்பட்டாலும், அது “அமீரகத்தில்” பெரிய அளவில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று மேலும் கூறியது.
இதைத் தொடர்ந்து பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளும் நிலநடுக்க அதிர்வுகளை உணர்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் நாட்டில் நிலநடுக்கம் உணரப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த மார்ச் மாதம் தெற்கு ஈரானில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பரில், ஈரானில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்கள் அமீரகத்தை பாதித்தன.
அப்போது சில கட்டிடங்களில் இருந்து குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அமீரகமும் அவ்வப்போது சிறிய நிலநடுக்கங்களை அனுபவிக்கிறது, ஆனால் “அவை தேசத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும், இதில் கவலைப்பட ஒன்றுமில்லை” என்று ஒரு NCM அதிகாரி தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தை உணரும்போதெல்லாம் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் வீட்டிலோ அல்லது வெளியிலோ பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அதிகாரி அறிவுறுத்தினார்.