தெற்கு ஈரானில் சனிக்கிழமை அதிகாலை 1.31 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
View this post on Instagram
அமீரகத்தில் நிலநடுக்கம்:
ஈரானின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அமீரகத்திலும் இருந்ததாக தேசிய வானிலை ஆய்வுமையம் மற்றும் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு அமைப்பு (National Seismic Network) ஆகியவை தெரிவித்துள்ளன.
குறிப்பாக அமீரகத்தின் வடக்குப் பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.