UAE Tamil Web

ஓமைக்ரான் பரவலை முன்னிட்டு அமீரகத்தில் முழு ஊரடங்கா?

Breaking News

கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று காரணமாக அமீரகத்தில் முழு லாக்டவுனுக்கு வாய்ப்பிருக்காது என வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“டெல்டாவை விட ஓமைக்ரான் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. டெல்டாவின் போது கூட, நாங்கள் முழு ஊரடங்கை அறிவிக்கவில்லை. நாட்டின் பொருளாதாரமும், சுகாதாரமும் சமநிலையில் இருந்தது. கொரோனாவின் அடுத்தடுத்த வேரியண்ட் வந்தாலும், முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை” என வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் தானி அல் சியோடி கூறினார்.

“அமீரகத்தில் 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று காரணமாக லாக் டவுனும், பயணக்கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டது. ஆனால் நாடு முழுவதும் கடுமையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதால், மீண்டும் லாக்டவுன் இல்லாத முதல் நாடு என்ற நிலையை எட்டியுள்ளோம். 2021ம் ஆண்டு பொருளாதாரத்தின் சாதக நிலையை இந்த ஆண்டும் வலுவாக மீட்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.

“நாங்கள் 2021ல் பொன்விழாவை கொண்டாடினோம். எக்ஸ்போ 2020 க்கு உலகை வரவேற்றோம்.லாக்டவுனை தொடர முடியாது என்பதை உலகிற்கு காட்டியுள்ளோம். ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் இடையிலான சமநிலை உறுதி செய்யப்பட வேண்டும் “ என்று அல் ஸீயோடி கூறினார்.

“ சமூக அளவில் இயல்பான நிலைக்கு திரும்பினால் தான், தொற்றுநோய் போன்ற உலகளாவிய சவால்களை சமாளிக்க முடியும்” என்றார்.

“இதனால், நாங்கள் எங்கள் ஒழுங்குமுறை அமைப்பு மற்றும் வணிகங்களை நடத்தும் விதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளோம். கடந்த சில மாதங்களில், நாங்கள் 100 சதவீத வெளிநாட்டு உரிமையை அறிவித்தோம். வேலையையும் பிற நாடுகளுடன் பொருந்துமாறு மாற்றினோம். அத்துடன் வேலைவாய்ப்பு சட்டங்களை மேம்படுத்தினோம். மற்ற நாடுகளுடன் பொருத்தக்கூடிய அளவில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்து, அவர்களை அமீரகத்திற்கு வரவேற்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டில் அமீரகம் வலுவான அடித்தளத்தில் நிற்கிறது. அது பொருளாதார மற்றும் சுகாதார அம்சங்களுக்கு இடையில் சமநிலையை பராமரிக்கும் என்று அமைச்சர் கூறினார்.

“நாங்கள் தினசரி அடிப்படையில் கொரோனா சோதனையைத் தொடர்கிறோம். மேலும் தடுப்பூசி பூஸ்டரை எடுக்க மக்களை ஊக்குவிக்கிறோம்” என்றும் அல் ஸீயோடி தெரிவித்தார்.

Breaking News
1 Share
Share via
Copy link