UAE Tamil Web

அமீரகத்தில் ரமலான் மாத வேலை நேரங்களில் ரிமோட் ஒர்க் ஆப்ஷன் இருக்கா.? விபரம் உள்ளே..!

அரபு மாதமான புனித ரமலான் வருகிற ஏப்ரல் 2 அல்லது 3 அன்று துவங்க இருக்கும் நிலையில் அமீரகத்தில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு ரமலான் மாதத்திற்காக வேலை நேரங்களை அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ரமலான் மாதத்தில் திங்கள் முதல் வியாழன் வரை அமீரகத்தின் அரசு நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மதியம் 2:30 மணி வரை வேலை நேரங்களாகும். அதுவே வெள்ளிக்கிழமையின் போது காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நிறுவனங்கள் அதிகபட்சமாக 40 சதவீத ஊழியர்களுக்கு ரிமோட் ஒர்க் வாய்ப்பை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ரமலான் மாதம் 30 நாட்களைக் கொண்டிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதால் ஈத் அல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) மே 2ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள இந்த தேதிகள் பிறை தென்படும் அடிப்படையில் தான் உறுதி செய்யப்படும்.

2 Shares
Share via
Copy link