அமீரகத் தலைநகர் அபுதாபி மற்றும் துபாய் சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் ஷார்ஜாவில் சுங்கச்சாவடி அமைக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரி முகமது அல் ஜாபி, ஷார்ஜாவின் முக்கிய சாலைகளில் சுங்கச் சாவடி அமைக்கப்டபோவதில்லை என்று கூறியுள்ளார்.
இது குறித்து முகமது அல் ஜாபி தெரிவிக்கையில், சுற்றுலாப் பகுதிகளுக்குள் நுழைய கட்டணம் வசூலிக்கப்படலாம். மேலும் ஷார்ஜாவின் சில சாலைகளில் டிரக்குகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாகவும், இதனை தவிர்த்து ஏனைய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.
அமீரகத்திலேயே அபுதாபி மற்றும் துபாய் ஆகிய இரண்டு எமிரேட்களில் டோல் கேட் கட்டணம் நடைமுறையில் உள்ளன. அதற்கான கட்டணமாக ஒரு வாகனத்திற்கு 4 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுகிறது.