UAE Tamil Web

அமீரகத்தில் பிச்சை எடுத்தால் இவ்வளவு தண்டனையா..?

அமீரகத்தில் பிச்சை எடுப்பது முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விதிமுறைகளை மீறி பல நாட்டுனர் பிச்சை எடுத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அமீரக பொது வழக்கறிஞர்கள் குழு, சமூக வலைதளத்தில் பிச்சை எடுப்பதற்காக தண்டனைகளை விளக்கி எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்காக 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை-சட்ட எண். 31 இன் பிரிவு 476 இன் படி, ‘இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் மூலம் பிச்சை எடுக்கும் குற்றம் செய்தால்’ தடுப்புக் காவலில் அடைக்கப்படுவர். தடுப்புக் காவலில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் தண்டனையும் 1 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.

பிச்சை எடுக்க வைக்கும் குழுக்களுக்கும் 6 மாத தடுப்புக் காவலும், 1 லட்சம் திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்படும்.

சமூகத்தின் உறுப்பினர்களிடையே சட்ட கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும், நாட்டின் சமீபத்திய சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் பொது வழக்கறிஞர்கள் குழு தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்து வருகிறது.

1 Share
Share via
Copy link