UAE Tamil Web

அமீரகத்தில் சனி,ஞாயிறு நாட்களில் வார விடுமுறை – பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பால் மக்கள் குழப்பம்..!

Dubai-Beach-5

சில புரளிகள் என்றுமே ஓயாதவை. அப்படியானவற்றுள் ஒன்றுதான் அமீரகத்தில் இனி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார விடுமுறை எனப்படும் செய்தி. சில மாதங்களுக்கு முன்னர் வாட்சாப் வாயன்கள் இதே செய்தியை கிளறிவிட, அமீரக அரசு ஊடகமான WAM அச்செய்தி பொய்யானது என விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது.

இந்நிலையில் ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த டைம்ஸ் நாளிதழ் அமீரகத்தில் இனி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார விடுமுறை அளிக்க அரசு பரிசீலித்துவருவதாக செய்தி வெளியிட்டுள்ளது.

டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட அறிவிப்பிற்கு அமீரக அரசு இதுவரையில் பதில் அறிக்கை ஏதும் அறிவிக்கவில்லை. இருப்பினும் கடந்த மே மாதம் இதுபோன்ற தகவல் வெளியாகும் போது அமீரக அரசிற்கு வார விடுமுறை நாட்களை மாற்றும் திட்டமில்லை என அரசு தெரிவித்திருந்தது.

“அதிகாரப்பூர்வ வார விடுமுறையை மாற்றம் செய்வது குறித்து அரசு திட்டமிட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தி போலியானது. WAM அப்படியான செய்தியை வெளியிடவில்லை. இது தவறான தகவலாகும். மக்களை திசைதிருப்பும் வேலை இது” என WAM நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகமது ஜலால் அல் ரைசி தெரிவித்துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமீரகத்தின் அதிகாரப்பூர்வ வார விடுமுறை தினம் மாற்றப்பட்டது. அதுவரையில் வியாழன் – வெள்ளிக்கிழமைகள் வார விடுமுறைகளாக இருந்தன. பின்னர், மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து பணிபுரியும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் வெள்ளி – சனிக்கிழமைகள் வார விடுமுறையாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பரப்பவேண்டாம் எனவும் அவை அமீரக சட்டப்படி குற்றம் எனவும் அமீரக அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துவருகின்றனர்.

“பொய்யான செய்திகள், போலி தகவல்கள் அல்லது வதந்திகளை வேண்டுமென்றே பரப்புபவர் அல்லது பொதுப் பாதுகாப்பைத் தொந்தரவு செய்யும் அல்லது மக்கள் மத்தியில் தூண்டுதலை ஏற்படுத்தும் அல்லது பொது நலனுக்கு தீங்கு விளைவிக்கும் ஆத்திரமூட்டும் பிரச்சாரங்களை பரப்புபவருக்கு, பெடரல் தண்டனைச் சட்டத்தின் 198 வது பிரிவின்படி ஒரு வருடத்திற்கும் அதிகமான காலத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும்” என அமீரக பொதுவழக்குத்துறை எச்சரித்துள்ளது.

Dubai-Beach-5
8 Shares
Share via
Copy link
Powered by Social Snap