UAE Tamil Web

துபாயில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த இந்து தொழிலாளி.. நல்லடக்கம் செய்த இஸ்லாமியர்கள்

துபாயில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை இந்து மத முறையப்படி இஸ்லாமியர்கள் இறுதிச்சடங்கு செய்துள்ளனர்.

தமிழகத்தின் வேலூரைச் சேந்த 58 வயதுடைய அருணா தங்கப்பா. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் வேலூரில் வசித்து வரும் அவரது சகோதரர் அன்புவுக்கு இந்திய துணை தூதரகம் மூலம் தகவல் அளிக்கப்பட்டது. அவரது உடலை துபாயிலேயே தகனம் செய்யுமாறு என்று அன்பு கேட்டுக் கொண்டார்.

அவரது இந்திய அரசின் ஆவணங்களை கிடைக்க தாமதம் ஏற்பட்டதால் இந்திய துணை தூதரத்தின் ஒத்துழைப்புடன் கடந்த 6 ஆம் தேதி அன்று இந்து மத முறைப்படி ஜெபல் அலி மயானத்தில் அவரை நல்லடகம் செய்தனர்.

இந்நிலையில் தனது சகோதரரின் உடலை தகனம் செய்த அனைவருக்கும் அவரது சகோதரர் அன்பு நன்றி தெரிவித்தார்.

துபாயில் இந்து சகோதரரின் உடலை இஸ்லாமியர்கள் தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டது மனிதாபிமானத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

8 Shares
Share via
Copy link