UAE Tamil Web

நாளை மிஃராஜ்-க்கு விடுமுறை அளிக்கப்படுமா? – தெளிவுபடுத்திய அரசு..!

Dome-of-the-Rock-

முகமது நபி அவர்கள் மெக்காவில் இருந்து ஜெருசலேம் சென்று பின்னர் அங்கிருந்து சொர்க்கத்துக்கு சென்ற இரவைக் குறிக்கும் விதமாக உலகமெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் இஸ்ரா வால் மிஃராஜ் தினமாகக் கொண்டாடிவருகிறார்கள். இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரஜப் மாதத்தின் 27 வது நாள் இஸ்ரா வால் மிஃராஜ் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தவருடம் கிரிகோரியன் நாட்காட்டியின்படி இஸ்ரா வால் மிஃராஜ் பண்டிகையானது மார்ச் 11, 2021 (வியாழக்கிழமை) அன்று கொண்டாடப்பட இருக்கிறது.

இந்நிலையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறைப் பட்டியலில் இஸ்ரா வால் மிராஜ் தினத்தன்று விடுமுறையானது அறிவிக்கப்படவில்லை. ஆகவே, அமீரகத்தின் அடுத்த விடுமுறை தினம் ஈத் அல் பித்ர் மட்டுமே.

நபிகளின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நினைவுகூரும் வகையில் மக்கள் தங்களது வீடுகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம்.

இருப்பினும் அமீரகம் முழுவதிலும் உள்ள பார்கள் மற்றும் உணவகங்களில் அன்றைய தினம் வழக்கம்போல கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமலில் இருக்கும் என நினைவுபடுத்தப்படுள்ளது. பான விடுதிகள் (House beverages) இன்று (மார்ச் 10) மாலை 6 மணிமுதல் நாளை (மார்ச் 11) இரவு 7 மணிவரையிலும் மூடப்பட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

Dome-of-the-Rock-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap