UAE Tamil Web

அபுதாபியில் திறக்கப்பட்டது இஸ்ரேல் தூதரகம் – வரலாற்று நிகழ்வு என அதிகாரிகள் வர்ணிப்பு..!

Israel UAE

பலநாள் பகையாளிகளாக இருந்த இஸ்ரேல்-அமீரகம் அமெரிக்காவின் தலையீட்டில் சமாதான உடன்படிக்கையான ஆப்ரஹாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கைகுலுக்கின.

- Advertisment -

இதன் நீட்சியாக வர்த்தகம், போக்குவரத்து ஆகியவை இருநாடுகளுக்கு இடையே துவங்கப்படும் எனவும் இருநாடுகளிலும் ராஜாங்க உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் தூதரகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இஸ்ரேலின் அமீரகத்திற்கான தூதரகம் அபுதாபியில் திறக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அமீரகத்திற்கான இஸ்ரேலிய தூதர் திரு. ஈதன் நயெஹ் (Eitan Naeh) – வின் வருகையையொட்டி அபுதாபியில் இஸ்ரேலிய தூதரகம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபுதாபியில் இஸ்ரேலிய தூதரகம் அமைந்தது இருநாட்டு உறவுகளை பல்வேறு வழிகளில் மேம்படுத்த உதவும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் அமீரக தூதரகத்தை அமைக்க அமீரக அரசு ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.