UAE Tamil Web

அமீரகத்தில் தூதரகங்களை அமைக்கும் பணியில் இஸ்ரேல் மும்முரம்.! எப்போது, எங்கு திறக்கப்படும் என்று வெளியான தகவல்

isrel

அமீரகம்-இஸ்ரேல் இடையிலான உறவு மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ள நிலையில், 2021 ஜனவரி முதல் வாரத்திற்குள் அமீரகத்தில் தனது தூதரகம் மற்றும் துணை தூதரகம் அமைக்கப்படும் என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

- Advertisment -

டிசம்பர் இறுதி அல்லது 2021 ஜனவரி முதல் வாரத்தில் தூதரக துவக்க விழா நடைபெறும் என்று நாங்கள் நம்புகிறோம். அமீரகத்திற்கான எங்கள் தூதரகம் அபுதாபியிலும், துணைத் தூதரகம் துபாயிலும் இருக்கும் என இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க அமீரகம்-இஸ்ரேலிய உறவுகளின் முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதில் தூதரகம் மற்றும் துணை தூதரகம் முக்கிய பங்கு வகிக்கும் என்றார். விரைவில் அமீரகத்தில் அமையவுள்ள எங்கள் தூதரகம் மற்றும் துணை தூதரகத்தின் பணிகள் பெரியதாக இருக்கும்.

தூதரகங்களை உரிய இடத்தில் அமைப்பது தொடர்பாக பொருத்தமான இடங்களை தேட கடந்த வாரம் அமீரகத்திற்கு ஒரு இஸ்ரேலிய அமைச்சர்கள் தூதுக்குழு வந்தது. அவர்கள் கடந்த வாரம் துபாய் மற்றும் அபுதாபி இரண்டு நகரங்களையும் பார்வையிட்டனர். எனினும் இருப்பிடம் குறித்து எதுவும் இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.

அமெரிக்கா தலைமையில் ஆப்ரகாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை தொடர்ந்து அமீரகமும், இஸ்ரேலும் ராஜாங்க ரீதியிலான உறவை வளர்த்து வருகின்றன. தங்கள் குடிமக்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு ஒப்புக் கொண்ட இரு நாடுகளுக்கு இடையே பயணிகள் விமான சேவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

துபாயின் பட்ஜெட் கேரியரான ஃப்ளைதுபாய் துபாய் மற்றும் டெல் அவிவ் இடையே தினமும் இரண்டு முறை விமானங்களை இயக்குவது குறிப்பிடத்தக்கது.