அபுதாபி பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவில் இந்தியர் ஒருவர் 12 மில்லையன் திர்ஹம்ஸை வென்று அசத்தியுள்ளார்.
அஜ்மானில் டிரக் டிரைவராக பணிபுரிந்து வரும் முஜீப், இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். அபுதாபியில் ஈத் அல் பித்ரின் இரண்டாவது நாளில் நடைபெற்ற பிக் டிக்கெட் ரேஃபிள் டிரா தொடர் 239 இல் 12 மில்லியன் திர்ஹம்ஸை முஜீப் வென்றுள்ளார்.
வெற்றிபெற்றது குறித்து அவர் கூறுகையில், “புனித மாதத்தில் நான் செய்த பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைத்துள்ளது. எனது வாழ்நாளில் நான் கோடீஸ்வரன் ஆவேன் என்று எதிர்பார்த்ததில்லை. எனக்கு நிதி நெருக்கடிகள் அதிகம். நான் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்கள் ஏராளம். நீண்ட வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்த பிறகுதான் கேரளாவில் சொந்த வீடு கட்ட முடிந்தது. இந்த தொகையின் மூலம் எனது வீட்டுக் கடனை அடைக்க முடியும். இப்போது தான் என்னால் நிம்மதியாக மூச்சுக்காற்று விட முடிகிறது” என்றார் முஜிப்.
மேலும், பிக் டிக்கெட் தொகுப்பாளர் ரிச்சர்டிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தபோது நான் டிரக்கிற்கு டீசல் நிறப்பிக்கொன்டிருந்தேன். அதனால் அவரது அழைப்பை எடுக்க முடியவில்லை. பின்னர் நான் அவருக்கு திரும்ப அழைத்தபோது தான் வெற்றிபெற்றது எனக்கு தெரிய வந்தது. இவ்வாறு முஜிப் தெரிவித்தார்.