துபாயின் 74வது வாராந்திர மஹ்சூஸ் ரேஃபிள் டிராவில் இந்தியர் ஒருவர் 1 லட்சம் திர்ஹம்ஸை வென்று அசத்தியுள்ளார்.
வெற்றிபெற்ற சந்தோஷ் சூப்பர் மார்க்கெட்டில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். பணி முடிந்து வீட்டுக்கு வந்ததும், தான் வெற்றிபெற்றதை அறிந்ததாக் தெரிவித்தார்.
இந்தியாவைச் சேர்ந்த சந்தோஷ் தனது வெற்றிக் குறித்து கூறுகையில், மஹ்சூஸ் டிராவில் பங்கேற்குமாறு எனது நண்பர் எனக்கு அறிவுறுத்தினார். எனவே, இந்த வாராந்திர மஹ்சூஸ் டிராவில் ஒன்றாக இணைந்து பங்கேற்க முடிவு செய்தோம். பின்னர் ரேஃபிள் டிரா வெற்றியாளர்களில் எனது பெயரைக் கண்டதும் என்னால் நம்ப முடியவில்லை” என்று அவர் கூறினார்.
மேலும், வெற்றிபெற்ற தொகையில் தனது வீட்டுக் கடனைச் செலுத்தவும், ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கவும், சிறிய கார் வாங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.