UAE Tamil Web

அபுதாபி பிக் டிக்கெட் டிரா: 24 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்!

அபுதாபி பிக் டிக்கெட் எலக்ட்ரிக் வாராந்திர டிராவில் இந்தியர் ஒருவர் 5 லட்சம் திர்ஹம்ஸ் பரிசாக வென்றுள்ளார். பிக் டிக்கெட்டில் இவர் வெற்றிபெறுவது இது இரண்டாவது முறையாகும்.

அபுதாபியில் சமையல்காரராக பணிபுரிந்து வருபவர் சையத் அலி. முன்னதாக இவர் 1998 ஆம் ஆண்டு பிக் டிக்கெட்டில் டிராவில் பரிசை வென்றிருக்கிறார் என்பதுதான் சுவாரஸ்யமே. அதவாது சரியாக 24 வருடங்களுக்கு பின் மீண்டும் வெற்றிபெற்று பரிசுத் தொகையை கைப்பற்றியுள்ளார்.

இது குறித்து இவரது நண்பர் அப்துல் மஜீத் கூறுகையில், பல ஆண்டுகளா நாங்கள் ஒன்றாக டிக்கெட் வாங்கி வருகிறோம். சுமார் 20 வருடங்களாக சையத் அலியுடன் ஒவ்வொரு மாதமும் டிக்கெட்டுகளைப் பகிர்ந்து வருகிறேன். சையத் மிகவும் அதிர்ஷ்டசாலி. பல ஆண்டுகளாக டிக்கெட் வாங்கி வரும் எனக்கு இப்போதுதான் பரிசு கிடைத்துள்ளது” என்றார்.

இந்நிலையில் இம்மாதம் நடைபெறும் வாராந்திர டிராவில் வெற்றிபெறுபவருக்கு 3 லட்சம் திர்ஹம்ஸ் பரிசுத் தொகை கிடைக்கும் என்று அபுதாபி பிக் டிக்கெட் குழு அறிவித்துள்ளது.

17 Shares
Share via
Copy link