அமீரகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி பயில குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்க்கத் தவறும் பெற்றோர்களுக்கு 5,000 திர்ஹம்ஸ் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்க நேரிடும் என அமீரக பொது வழக்குத்துறை எச்சரித்துள்ளது. குழந்தைக்கு பெற்றோர்கள் இல்லாத பட்சத்தில் அவர்களின் காப்பாளர்கள் முறையாக குழந்தைகளுக்கு கல்வி பயில பள்ளிக்கூடங்களில் சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தகுந்த காரணங்களின்றி குழந்தைகள் கல்வி பயில்வதற்கும் யாரும் தடையாக இருக்கக்கூடாது என்றும் அனைவருக்கும் கல்வி பயில அமீரக அரசு சம உரிமையை வழங்கியுள்ளதாகவும் அமீரக பொது வழக்குத்துறை சுட்டிக்காட்டியுள்ளது
