UAE Tamil Web

வானில் வண்ண கோலமிடும் விமானங்கள்.. அமீரக வாசிகளே தயாராக இருங்கள் – நாளை மாலை அமீரகத்தில் நடக்கவிருக்கும் “Air Show”

துபாய் நகரின் அனைத்து குடியிருப்பாளர்களையும் பார்வையாளர்களையும் நாளை மாலை (திங்கட்கிழமை, ஜூன் 20) நடக்கவிருக்கும் விமான சாகச நிகழ்ச்சியை காண பெருமையுடன் அழைப்புவிடுத்துள்ளது நமது அமீரக அரசு.

நாளை மாலை 6.20 மணி முதல், அமீரகத்தில் விமானப்படையின் மிகவும் திறமையான Aerobatics Demonstration குழுவான ஃபர்சன் அல் எமாரத், பல்வேறு ஜாலங்களை வானில் நடத்தவுள்ளது. புர்ஜ் கலீஃபா, ஐன் துபாய், பாம் ஜுமைரா, புர்ஜ் அல் அரப், கைட் பீச், துபாய் பிரேம் மற்றும் நகரின் சமீபத்திய ஈர்ப்பான எதிர்கால அருங்காட்சியகம் உள்ளிட்ட துபாயின் சின்னச் சின்ன அடையாளங்களை இந்த ஜெட் விமானங்கள் கடந்து செல்லும்.

வண்ணமிகு புகைக்கைகளை வெளியிட்டவாறு இந்த விமானங்கள் விண்ணில் சீறிப்பாய்வதை காண பலரும் ஆர்வமாக உள்ளனர் என்றே கூறலாம்.

புதுமையான அனுபவங்களின் மூலம் மக்களை ஒன்றிணைக்க நகரத்தின் முக்கிய கூட்டாளர்களுடன் இணைந்து துபாய் அரசு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

உங்கள் கேமராக்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள், ஆச்சர்யப்பட காத்திருங்கள், வரம்புகள் இல்லாமல் ஆர்ப்பரிக்கும் வானத்தைப் பார்க்க தயாராகுங்கள்” என்று துபாய் டூரிசம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap