UAE Tamil Web

உங்க உதவி நம்ம நட்பை வலுப்படுத்தும்… அபுதாபி இளவரசரை பாராட்டிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதால் அந்நாட்டில் பதற்றம் நிலவி வருகிறது. ஆப்கனில் சிக்கியிருந்த அமெரிக்க மக்கள் போர் விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்பு நடவடிக்கைகளுக்கு அமீரக அரசு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. போர் விமானங்கள் தரையிறங்குவதற்கும் ஆப்கனில் இருந்து வரும் மக்கள் அமீரகம் வந்து டிரான்சிட் மூலம் அமெரிக்கா திரும்பவும் அமீரக அரசு அனுமதி அளித்தது. இதனை வெகுவாக வரவேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அமீரக அரசின் உதவிக்கு நன்றி தெரிவிப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அவரை தொடர்ந்து தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அபுதாபி பட்டத்து இளவரசரும் ஆயுதப்படை துணை தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Telephone diplomacy: Joe Biden signals a new approach towards Turkey | The  Interpreter

ஆப்கனில் இருந்து மக்களை வெளியேற்ற அமீரக உதவ முன்வந்திருப்பது அமெரிக்காவுடனான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் எனக்கூறி பட்டத்து இளவரசரை அதிபர் ஜோ பைடன் வெகுவாக பாராட்டியுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார் மோரிசனும் பட்டத்து இளவரசருக்கு பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link