UAE Tamil Web

“மண்ணை காக்க ஒரு பயணம்”.. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த “சத்குரு ஜக்கி வாசுதேவ்” – ஜுபைல் தீவு, ஒரு பாலைவன சோலை என்று புகழாரம்!

“Journey to Save Sand” (‘மண்ணைக் காப்பாற்றப் பயணம்’) என்ற தலைப்பில் 100 நாள் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆன்மீக குரு திரு. சத்குரு அவர்கள் இயற்கை அடிப்படையிலான காலநிலை மாற்றத் தீர்வுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முயற்சிகளால் ஈர்க்கப்பட்டுள்ளார்.

யோகி தனது தனி மோட்டார் சைக்கிள் பயணத்தின் ஒரு பகுதியாக அமீரகத்திற்கு தற்போது வந்துள்ளார். அவருடைய இந்த பயணம் கடந்த மார்ச் மாதம் லண்டனில் இருந்து புறப்பட்டு இந்தியாவின் தெற்கு முனையில் முடிவடைவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Soil Crisis குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும், உலகத் தலைவர்களிடம் இது குறித்து வலியுறுத்துவதற்கும் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று புதன்கிழமை, அமீரகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அபுதாபியில் உள்ள ஜுபைல் தீவின் சதுப்புநில பூங்காவில் ஜக்கி அவர்களுக்கு விருந்தளித்தது.

அமீரகம் வரும் 2030ம் ஆண்டிற்குள் 100 மில்லியன் சதுப்பு நிலங்களில் பயிரிட இலக்கு வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது இங்குள்ள சதுப்புநில காடுகளின் பரப்பளவை 483 சதுர கிலோமீட்டராக உயர்த்தும் மற்றும் ஆண்டுக்கு 1,15,000 டன் Carbon dioxideஐ வளிமண்டலத்தில் இருந்து குறைக்க உதவும்.

அமீரகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம் பின்ட் முகமது அல்மெய்ரி முன்னிலையில் கையெழுத்து இயக்க விழாவும் நடைபெற்றது.

மேலும் அல்மெய்ரி, சத்குரு, அமீரகத்தின் இந்திய தூதர் சுஞ்சய் சுதிர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் சதுப்புநில நாற்றுகளை நட்டனர். இது ஜுபைல் தீவின் ஒத்துழைப்புடன் அபுதாபியின் EAD (Environment Abu Dhabi) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இறுதியில் இந்த நிகழ்ச்சியில் பேசிய சத்குரு “பல வழிகளில் அமீரகம் இந்த பிராந்தியத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியும் என்று நான் உணர்கிறேன்” என்றார். பலர் பாலைவனத்தில் எதுவுமே செய்யமுடியாது என்று நினைக்கின்றனர். ஆனால் ஜுபைல் தீவு, ஒரு பாலைவனத்தில் என்ன செய்ய முடியும் என்பதற்கு ஒரு மிகசிறந்த உதாரணம் என்றார் அவர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap