இந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகியான கே.எஸ். சித்ரா அவர்களுக்கு அமீரக அரசு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை வழங்கியிருக்கிறது. குறிப்பிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு கோல்டன் விசாவை வழங்க இருப்பதாக அமீரக அரசு கடந்தாண்டு அறிவித்திருந்தது.
இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில்,” அமீரக அரசின் இந்த விசாவினை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். கோல்டன் விசாவை அளித்த அமீரக குடியேற்றத்துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் முகமது அகமது அல் மர்ரி அவர்களுக்கு நன்றி” என சித்ரா குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக மோகன்லால், மம்மூட்டி, சந்தோஷ் சிவன், துல்கர் சல்மான், நடிகை ஊர்வசி, மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கும் அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
