UAE Tamil Web

இனி அமீரகத்திலிருந்து கேரளாவுக்கு பயணிப்பதில் சிக்கல் இல்லை…

air-india-flights,-uae,-india,-covid-19,-repatriation

சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை கேரளா அரசு தளர்த்தியுள்ளதாக அம்மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் மற்றும் மற்ற சர்வதேச பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தல் மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கேரள சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அமீரகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்பவர்கள் உட்பட அனைத்துப் பயணிகளும் ஏழு நாள் வீட்டில் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக, குறுகிய கால பயணிகளுக்கு விதிகள் தளர்த்தப்பட்டன. இருப்பினும் தற்போது பிப்ரவரி 4 அன்று திருத்தப்பட்ட விதிமுறைகளில், முந்தைய அனைத்து கட்டுப்பாடுகளும் மாற்றப்பட்டுள்ளது. இந்தியர்கள் மற்றும் மற்ற சர்வதேச பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டும் தனிமைப்படுத்தல் மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். கொரோனா தொற்று இருப்பதாக அறிகுறிகள் தோன்றினால், சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பிறகு 8வது நாளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச பயணிகள் கேரளாவில் தங்கியிருக்கும் போது கொரோனா அறிகுறி இருந்தால் RT PCR பரிசோதனை மேற்கொள்ளவும, அதன் முடிவின் அடிப்படையில் மற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

air-india-flights,-uae,-india,-covid-19,-repatriation
5 Shares
Share via
Copy link