UAE Tamil Web

அபுதாபி பிக் டிக்கெட் டிராவில் 3 லட்சம் திர்ஹம்ஸ் வென்ற கேரள இளைஞர்

அபுதாபியில் பிக் டிக்கெட் வாராந்திர மின்னணு டிராவில் கத்தாரில் வசிக்கும் இந்தியர் ஒருவர்  3 லட்சம் திர்ஹம்ஸ் பரிசுத் தொகையை வென்றுள்ளார்.

அமீரகத்தில் முன்னதாக வசித்து வந்த ஷம்சீர் புரக்கல், அபுதாபியில் 2017 ஆம் ஆண்டு பணிபுரிந்தபோது பிக் டிக்கெட்டை வாடிக்கையாக வாங்கத் தொடங்கியுள்ளார். பின்னர் கத்தார் சென்றும் பிக் டிக்கெட் வாங்குவதை வழக்கமாக வைத்ததுள்ளார். 30 வயதான ஷம்சீர் சமீபத்தில் நடந்த அபுதாபியில் பிக் டிக்கெட் வாராந்திர மின்னணு டிராவில் 3 லட்சம் திர்ஹம்ஸ் வென்றுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “என்ன கூறுவது என்று எனக்கு தெரியவில்லை, வார்த்தைகள் வரவில்லை. எனக்கும் என் மனைவிக்கும் இந்த வருடம் மிகவும் அதிர்ஷ்டமானதாக அமைந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு எனது மனைவி கர்ப்பமானாள். தற்பொழுது நான் பிக் டிக்கெட்டில் வெற்றி பெற்றுள்ளேன்” என்று தெரிவித்தார்.

கேரளவைச் சேர்ந்த ஷம்சீர் புரக்கல், கடந்த 3 ஆண்டுகளாக கத்தாரில் பணிபுரிந்து வருகிறார். மேலும் அவர் கூறுகையில், இந்தப் பணத்தில் எனது பங்கைக் கொண்டு எனது MBA படிப்பைத் தொடர லண்டனுக்குச் செல்ல இருப்பதாகவும் கூறினார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap