UAE Tamil Web

அபுதாபி: பஹ்ரைன் மன்னரை சந்தித்த அமீரக தலைவர்கள்..!

Bahrain king sheikh mohammed

அபுதாபியில் பஹ்ரைன் மன்னரான ஹமாத் பின் இஸா அல் கலீஃபா அவர்களை அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் சந்தித்தனர்.

அபுதாபியில் பஹ்ரைன் மன்னர் தங்கியிருக்கும் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. மேலும் பஹ்ரைன் மன்னர் நீடூடி வாழவும், அவரது தலைமையின் கீழ் பஹ்ரைன் மக்களின் வாழ்வில் வளம் பெருகட்டும் என்ற அமீரக தலைவர் பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுடைய வாழ்த்துச் செய்தியை அமீரக தலைவர்கள் பஹ்ரைன் மன்னரிடம் தெரிவித்தனர்.

பல்லாண்டுகளாக நட்பு நாடுகளாக நீடிக்கும் அமீரகம் – பஹ்ரைன் இடையே உள்ள பந்தத்தை மேலும் வலுப்படுத்தவும் இருநாட்டு மக்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தோடும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

துபாய் ஆட்சியாளர் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஆகியோரை சந்தித்தது பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும், மக்களின் வளமான எதிர்காலத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும் பஹ்ரைன் மன்னர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், பஹ்ரைனுக்கான அமீரக தூதர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஷேக் சுல்தான் பின் ஹம்தான் பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் உடனிருந்தனர்.

Bahrain king sheikh mohammed
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap