குவைத்தைச் சேர்ந்த இந்திய பெண் ஒருவர் அபுதாபி பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவில் பங்கேற்று, 2 லட்சத்து 50 ஆயிரம் திர்ஹம்ஸ் பரிசை வென்றுள்ளார்.
அபுதாபியில் மாதம் முறை நடைபெற்று வரும் பிக் டிக்கெட் ரேஃபிள் டிரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாராந்திர டிராவுக்கான வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகையை வழங்கியது.
அதன்படி இந்த வாரத்தில் நடைபெற்ற வாராந்திர மின்னணு டிராவை குவைத்தில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த செவிலியரான சவிதா நாயர் 250,000 திர்ஹம்ஸ் பரிசுத் தொகையை வென்றுள்ளார்.
இதுகுறித்து சவிதா நாயர் கூறுகையில், “நான் வெற்றிப் பெற்றதை என்னால் நம்ப முடியவில்லை. திடீர் தொலைபேசி அழைப்பால் மிகவும் ஆச்சரியத்தில் உரைந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தனது குடும்பத்துடன் பிக் டிக்கெட் வாங்கி வருகிறேன். தற்போது 2,500 திர்ஹம்ஸ் வென்றதாக நினைத்தேன். ஆனால் 250,000 திர்ஹம்ஸ் பரிசுத் தொகையை நான் வென்றுள்ளேன் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பரிசித் தொகையை எவ்வறு செலவழிப்பது குறித்த திட்டங்கள் இல்லை” என்றார் சவிதா.